/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி
வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த தக்காளி
ADDED : ஜூலை 09, 2024 05:48 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தக்காளி மார்க்கெட்டில் வரத்து அதிகமானதால் 3 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கப்பட்டது.
சில மாதங்களாக பருவம் தவறிய மழையால் தக்காளி செடிகள் அழுகின.
இதனால் சாகுபடி குறைந்து வரத்து குறைந்தது. இதன் காரணமாக 25 கிலோ எடை கொண்ட தக்காளிப் பெட்டி ரூ. 2500 வரை விற்பனையானது.
தற்போது ஆந்திரா தக்காளியுடன் உள்ளூர் வரத்து அதிகமானதால் விலை குறைந்து வருகிறது. கிலோ ரூ.50க்கு விற்ற தக்காளி தற்போது 3 கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது.