/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை'யில் காயத்துடன் உலாவிய காட்டுமாடு ' கொடை'யில் காயத்துடன் உலாவிய காட்டுமாடு
' கொடை'யில் காயத்துடன் உலாவிய காட்டுமாடு
' கொடை'யில் காயத்துடன் உலாவிய காட்டுமாடு
' கொடை'யில் காயத்துடன் உலாவிய காட்டுமாடு
ADDED : ஜூலை 09, 2024 05:49 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் பஸ்ஸ்டாண்டில் வயிற்றில் காயத்துடன் காட்டுமாடு நடமாடியது. கொடைக்கானலில் ஏராளமான வன விலங்குகள் உள்ளதாக கூறப்பட்டாலும் காட்டுமாடுகளின் எண்ணிக்கையே அதிகம்.
இதற்கு தேவையான மேய்ச்சல் புல்வெளி, தண்ணீர் வனத்தில் இல்லாத நிலையில் நகர் பகுதியில் உலா வருகின்றன. இவைகள் பெரும்பாலும் உடலில் காயங்களுடன் நகரில் சுற்றி திரிகின்றன. நேற்று மதியம் முதிர்ச்சியடைந்த காட்டுமாடு வயிற்றில் காயத்துடன் பஸ்ஸ்டாண்டிற்குள் உலாவியது. ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அலைபேசியில் புகைப்படங்களை எடுத்தவாறு பின் தொடர்ந்தனர்.
செவன் ரோடு வழியாக சென்ற காட்டு மாடு ஒரு கட்டத்தில் பயணிகளை நோக்கி திரும்பியது. பயணிகள் அலறியடித்து ஓடினர். நகரில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டுமாடுகளுக்கு துரித சிகிச்சை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உபாதைகளால் பாதித்த காட்டுமாடுகளால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் முன் வனத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.