Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றுச்சூழலை பாதுகாத்து நலம் காப்போம்

சுற்றுச்சூழலை பாதுகாத்து நலம் காப்போம்

சுற்றுச்சூழலை பாதுகாத்து நலம் காப்போம்

சுற்றுச்சூழலை பாதுகாத்து நலம் காப்போம்

ADDED : ஆக 03, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
ஆடிமாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கும்.

அத்துடன் சேர்த்து பலதரப்பட்ட காய்ச்சலும் வரத் தொடங்கும். பொதுவாக செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல்வேறு இயற்கை காரணங்களால் காய்ச்சல் (பறவை காய்ச்சல், மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா) வாந்தி, வயிற்றுவலி, போன்ற பலதரப்பட்ட நோய்கள் வரும் பருவம் ஆகும்.மேற்கூறப்பட்ட பிரச்னைகள் பெரும்பாலும் பள்ளிக்கூட சிறார்கள் ,முதியவர்கள் , நோய் எதிர்ப்பு குறைபாடு கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.வரும்முன்காப்பதே சாலச்சிறந்தது .ஒன்றேசெய், நன்றேசெய், அதை இன்றே செய் எனும் அழகுத் தமிழ்வாக்கிற்கிணங்க இன்று முதல் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று பார்ப்போம்.கொசு உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய தேவையற்ற தண்ணீர் தேக்கங்களை கண்டறிந்து உடனே மூட வேண்டும். ஆறிப்போன உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். - டாக்டர் எஸ். நிர்மலா, பொதுமருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர், ராஜராஜேஸ்வரி மருத்துவமனை,திண்டுக்கல், 98421 88880.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us