/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குடகனாற்றின் வழி நெடுகிலும் மூடிக்கிடக்கும் கருவேலம் குடகனாற்றின் வழி நெடுகிலும் மூடிக்கிடக்கும் கருவேலம்
குடகனாற்றின் வழி நெடுகிலும் மூடிக்கிடக்கும் கருவேலம்
குடகனாற்றின் வழி நெடுகிலும் மூடிக்கிடக்கும் கருவேலம்
குடகனாற்றின் வழி நெடுகிலும் மூடிக்கிடக்கும் கருவேலம்

விளையாட கூட வாய்ப்பில்லை
பி.முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், அழகாபுரி: ஒரு காலத்தில் மணல் பாங்காக இருந்த ஆறு தற்போது கருவேல முட்கள் நிறைந்த காடாக மாறிவிட்டது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் ஆற்றுப்பகுதியில் சென்று விளையாடுவதற்கு கூட வாய்ப்பில்லை. அழகாபுரியை யொட்டி குடகனாறு செல்லும் நிலையில் கருவேல முட்கள் நிறைந்து கிடப்பதால் விஷ பூச்சிகள்
முற்றிலுமாக மாறிவிட்டது
எம்.முருகன், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர், அழகாபுரி: ஒரு காலத்தில் இப்பகுதி மக்கள் துணி துவைப்பது, குளிப்பது என்பதெல்லாம் ஆற்றுப்பகுதியில் தான். முன்பு ஆற்றிலே ஊத்து போட்டு தண்ணீர் பிடித்தோம் . விடுமுறை தினங்களில் ஆற்றில் மீன் பிடிப்பது தான் எங்களது பொழுதுபோக்கு. ஆனால் நிலைமை இன்று முற்றிலுமாக மாறிவிட்டது.ஆற்றுப்பகுதியில் கண்ணுக்கு எட்டிய துாரம் கருவேல முட்களே காட்சியளிக்கிறது. அடர்ந்து வளர்ந்துள்ளதால் அந்தப் பகுதிக்கு யாரும் செல்வதில்லை. இதை பயன்படுத்தி சட்ட விரோத செயல்களும் தொடர்கிறது.
பாதுகாக்க வேண்டும்
இல.சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்: குடகனாறு ஒரு காலத்தில் மணல் பாங்கான ஆறாக மழைக்காலத்தில் ஆறு மாதங்களுக்காவது வற்றாமல் நீரோடும் ஆறாக இருந்தது. தொடர் மணல் திருட்டால் எங்கு பார்த்தாலும் கருவேலம் முளைத்துவிட்டன.