ADDED : ஜூன் 04, 2024 06:13 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளரும் எம்.,எல்.ஏ.,வுமான செந்தில்குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் காமாட்சி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, துணைச் செயலாளர்கள் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
கருணாநிதி உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஆனந்த், பஜீருல்ஹக், சேகர், பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.
நத்தம்: நத்தம் அருகே வத்திபட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி முன்னிலை வகித்தனர்.
வத்திபட்டியில் கொடி ஏற்ற மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
அன்னதானம் நடந்தது. ஊராட்சி தலைவர்கள் சாத்திபவுர், அழகுநேரு, அவைத் தலைவர் சரவணன், கவுன்சிலர் இஸ்மாயில், சிறுபான்மை அணி அப்துல் மஜீத், விவசாய அணி அயூப்கான் பங்கேற்றனர்.
நத்தத்தில் நகர செயலாளர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
*சாணார்பட்டியில் மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி தலைவரகள் தேவி ராஜா சீனிவாசன், சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் நடந்த விழாவில் 500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்ட் முன்பு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அவைத்தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், மார்க்கெட் சங்க செயலாளர் ராமசாமி கலந்து கொண்டனர்.
*ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி துணைத்தலைவர் எம்.வி.ரங்கசாமி தலைமை வகித்தார்.
மலர் துாவி அஞ்சலி, இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.