ADDED : ஜூன் 04, 2024 06:13 AM
வேடசந்துார்,: வேடசந்துார் அணைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முத்துவேல் 50.
அரியபந்தம் பட்டியில் உள்ள இவரது தோட்டத்தில் மின் மோட்டாரை கிணற்றில் இறக்கி ஏற்றுவதற்கான இரும்பு ரோப் இருந்தது.
இதை அங்கே வந்த இளைஞர் ஒருவர் திருடி தனது டூவீலரில் வைத்தார்.
இதை கவனித்த அப்பகுதி மக்கள் இளைஞரை பிடித்து வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வேடசந்துார் பகுதி நுாற்பாலையில் வேலை செய்யும் அரவிந்த் என்பதும்,அவர் வந்த டூவீலரும் திருடப்பட்டது என்பது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.