/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாசில்தார் அலுவலகங்களில் துவங்கியது ஜமாபந்தி தாசில்தார் அலுவலகங்களில் துவங்கியது ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் துவங்கியது ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் துவங்கியது ஜமாபந்தி
தாசில்தார் அலுவலகங்களில் துவங்கியது ஜமாபந்தி
ADDED : ஜூன் 19, 2024 06:22 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் 1433- ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று துவங்கியது.
அதன்படி நத்தம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி.பழநியில் டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் செல்வம், திண்டுக்கல் கிழக்கில் தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, வேடசந்துாரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, நிலக்கோட்டையில் உதவி ஆணையர்(கலால்) பால்பாண்டி, குஜிலியம்பாறையில் மாவட்ட ஆத்திராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, ஆத்துாரில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ., சக்திவேல், ஒட்டன்சத்திரத்தில் பழநி ஆர்.டி.ஓ., சரவணன், கொடைக்கானலில் ஆர்.டி .ஓ., சிவராம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா , இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு - இறப்பு, சாதி, இருப்பிட, வருமான சான்றிதழ்கள், ரேஷன் அட்டை என பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக பெறப்படுகிறது.
இதில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.