திண்டுக்கல் : மா.கம்யூ., திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய கும்பலைக் கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச்செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி, ராணி, வசந்தாமணி, அஜய்கோஷ், நகரச்செயலாளர் அரபு முகமது, ஒன்றியச்செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டனர்.