/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது ரயில் டிக்கெட் விற்றவர் கைது
ADDED : ஜூலை 24, 2024 05:39 AM
திண்டுக்கல் : மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் ரயில் டிக்கெட்டை திண்டுக்கல்லில் 6 மாதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் முத்துநகரை சேர்ந்தவர் கண்ணன்56. இப்பகுதியில் சேவை மையம் நடத்துகிறார். ரயில் டிக்கெட் முன்பதிவும் செய்தும் கொடுத்தார். ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையான உரிமம் பெறாமல் கூடுதலாக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்த தகவல் டெல்லி ஐ.ஆர்.டி.சி.,தலைமை நிர்வாகத்திற்கு தெரியவர, மதுரை ஸ்பெஷல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களும் ,திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்ணனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஐ.ஆர்.டி.சி., உரிமம் பெறாது மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.