/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மின்தடையை கண்டித்து மறியல்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மின்தடையை கண்டித்து மறியல்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மின்தடையை கண்டித்து மறியல்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மின்தடையை கண்டித்து மறியல்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மின்தடையை கண்டித்து மறியல்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 24, 2024 05:40 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் பழநி ரோட்டில் மலை கிராமத்தில் நீடிக்கும் மின் தடையை கண்டித்து பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
வடகவுஞ்சி ஊராட்சி உட்பட்ட மேல்பள்ளத்தில் ஒரு வாரமாக தொடர் மின்தடை நீடித்து வர கிராமங்கள் இருளில் மூழ்கின. மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் மின்பாதைகளில் மரங்கள் விழுந்து மின்தடை தொடர்ந்தது. மேல்பள்ளத்தில் தொடர் மின் தடை ஏற்பட புகார் அளித்தும் மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை பொதுமக்கள் பழநி கொடைக்கானல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் போலீசார் , மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக சீர் செய்யப்படும். எதிர்காலத்தில் மின்தடை ஏற்படாது மாற்று வழித்தடத்தில் மின்பாதை ஏற்படுத்தப்பட்ட வருகிறது. அவை விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்க மறியல் கைவிடப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.