/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயிலை அகற்றாது ரோடு அமையுங்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் கோயிலை அகற்றாது ரோடு அமையுங்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோயிலை அகற்றாது ரோடு அமையுங்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோயிலை அகற்றாது ரோடு அமையுங்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோயிலை அகற்றாது ரோடு அமையுங்க குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2024 05:50 AM

திண்டுக்கல்: மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கோயிலை அகற்றும் நோக்கத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 215 பேர் மனு வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், சிறுபான்மையினருக்கான சிறுதொழில் உதவி திட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.10.00 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவி என 61 பயனாளிகளுக்கு ரூ.10.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் கலந்துகொண்டனர்.
கோயிலை அகற்றாதீங்க
இதில் ஆத்துார், நந்தனார் தெரு பகுதி ஊர் மக்கள் அளித்த மனுவில், 100 ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல் - ஆத்துார் செல்லும் ரோட்டின் வடபுறத்தில் காளியம்மன், முனியப்பன் சுவாமிகளின் கோயில்கள் உள்ளன. மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கோயிலை அகற்ற முற்படுகின்றனர்.
கோயில் அமைந்துள்ள இடத்தை அகற்றி ரோடு அமைக்க தேவையில்லை. எங்களது இறைநம்பிக்கையை காக்கும் வண்ணம் கோயில் இடம் தவிர்த்து ரோடு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.