/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முறைகேடாக குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் மறியல் முறைகேடாக குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் மறியல்
முறைகேடாக குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் மறியல்
முறைகேடாக குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் மறியல்
முறைகேடாக குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் மறியல்
ADDED : ஜூலை 14, 2024 05:19 PM
திண்டுக்கல்:
குடிநீர் குழாயில் முறைகேடாக குடிநீர் வழங்கப்படுவதாக கூறி திண்டுக்கல்- வத்தலக்குண்டு ரோடு பள்ளப்பட்டி அருகே பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குழாயில் முறைகேடாக இணைப்பு கொடுத்து, அதன் மூலம் தனியார் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் மக்கள் நேற்று திண்டுக்கல்- வத்தலக்குண்டு ரோட்டில் பள்ளப்பட்டி அருகே ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பரமன், பொதுமக்களை சமாதானப்படுத்த அங்கு வந்தார். பின்னர் பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி உரிய தீர்வு அளிப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார். இருந்தபோதிலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாலுகா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு அளிப்பதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஊராட்சி தலைவர் பரமன் கூறுகையில்,முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து என் கவனத்திற்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
..................................