ADDED : ஜூலை 22, 2024 05:46 AM

பழநி: ஹிந்து கோயில்களை சீரழிக்கும் ஹிந்து அறநிலைத்துறையை வெளியேற வலியுறுத்தி பழநி பட்டத்து விநாயகர் கோயில் அருகே ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கோட்ட செயலாளர் பாலன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் பத்மநாபன், அஜித் குமார் பங்கேற்றனர்.
பழநி பாலசமுத்திரம் கலையரங்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் ரகு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் பங்கேற்றனர்.