/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது முருங்கைக்காய் விலை ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது முருங்கைக்காய் விலை
ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது முருங்கைக்காய் விலை
ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது முருங்கைக்காய் விலை
ஒட்டன்சத்திரத்தில் சரிந்தது முருங்கைக்காய் விலை
ADDED : ஜூலை 23, 2024 05:40 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுாார் சுற்றியபகுதிகளில் முருங்கைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120, 5 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ. 90க்கு விற்றது. தற்போது முருங்கைக்காய் அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்வதால் வியாபாரிகள் குறைந்த அளவிலான காய்கறிகளையே கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக முருங்கை விலை சரிவடைந்து கிலோ ரூ.60க்கு விற்றது. முருங்கை விலை தொடர்ந்து குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.