/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 05:59 AM

திண்டுக்கல் : பழங்குடி மக்களுக்கு இனச்சான்று, தொகுப்புவீடு, மனைப்பட்டா வழங்க வேண்டும், புலையன் இன மக்கள் மீண்டும் பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும், காட்டுநாயக்கன்பட்டி மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட செயலாளர் அஜய் கோஷ் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி பேசினார். ஏ.ஐ.கே.எஸ்., மாவட்ட தலைவர் பெருமாள், டி.என்.டி.ஏ., மாநிலக்குழு பொன்னுச்சாமி , மாவட்ட தலைவர் செல்லையா பங்கேற்றனர்.