/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி வரும் பக்தர்களுக்கு ஏஜன்ட்களால் தொல்லை பழநி வரும் பக்தர்களுக்கு ஏஜன்ட்களால் தொல்லை
பழநி வரும் பக்தர்களுக்கு ஏஜன்ட்களால் தொல்லை
பழநி வரும் பக்தர்களுக்கு ஏஜன்ட்களால் தொல்லை
பழநி வரும் பக்தர்களுக்கு ஏஜன்ட்களால் தொல்லை
ADDED : ஜூன் 09, 2024 05:09 AM
பழநி : பழநி பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் அடிவாரம் வரை ஏஜென்ட்கள் தொந்தரவால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வெளிமாநில ,மாவட்ட பக்தர்கள் பஸ், ரயில், கார் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். பழநி கார் , சுற்றுலா பஸ், வேன் வாகனங்களில் வரும் பக்தர்களை கண்டறிந்து குறிப்பிட்ட லாட்ஜ்,விடுதிகளில் தங்க ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பக்தர்களை குறிப்பிட்ட லாட்ஜ்களில் தங்க வற்புறுத்தி வருகின்றனர். இதனால் லாட்ஜ் ஏஜன்ட்களுக்கு கமிஷன் மூலம் வருமானம் கிடைக்கிறது.
தற்போது நீதிமன்ற உத்தரவின் படி கிரி வீதியில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தனியார் நிலங்களில் வாகன நிறுத்துமிடங்கள் உருவாகி உள்ளன. பழநி கிரி வீதிக்குள் நுழைய முயலும் வாகனங்களை குறிவைத்து தனியார் வாகன நிறுத்தங்களில் நிறுத்த ஏஜன்ட்களும் வற்புறுத்துகின்றனர்.
கோயில் சார்பில் இலவச சுற்றுலா பஸ் நிலையம் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இது தெரியாத வெளியூர் வாகன ஓட்டுநர்கள் தனியார் வாகன நிறுத்தங்களில் நிறுத்தி பண இழப்புக்கு ஆளாகின்றனர். இதனிடையே தனியார் வாகன நிறுத்த ஏஜன்ட்கள் , தனியார் விடுதி ஏஜன்ட்கள் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. இவர்களால் பக்தர்களும் பாதிக்கின்றனர்.