/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு கட்டுமான நல வாரிய தலைவர் தகவல் 3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு கட்டுமான நல வாரிய தலைவர் தகவல்
3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு கட்டுமான நல வாரிய தலைவர் தகவல்
3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு கட்டுமான நல வாரிய தலைவர் தகவல்
3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் பதிவு கட்டுமான நல வாரிய தலைவர் தகவல்
ADDED : ஜூன் 09, 2024 04:47 AM
திண்டுக்கல், : ''தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்'' என கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:
தேர்தல் முடிந்து 2 மாதங்கள் ஆகிறது. தேர்தல் ஆணையத்தால் 3 மாத காலம் அரசு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளது . இக்கால கட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய முடியவில்லை. தி.மு.க., அரசு பதவியேற்ற 3 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 56 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.56 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 50 ஆயிரம் தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளில் 21 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். 18 வாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ. 1,555 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே வாரியம் உள்ளது .ஆனால் தமிழகத்தில் மட்டும் திருநங்கை , மாற்றுத்திறனாளிகள் என 36 தனி வாரியங்கள் உள்ளது என்றார்.