/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு
தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 05:54 AM
திண்டுக்கல் : ''தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்தாய்வு மையங்கள் முன்பாக நடத்தும் மறியல் போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது,'' என அதன் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது : ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2006 ம் ஆண்டு பணி வரன்முறை செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் மறுக்கப்பட்ட உரிமை அரசாணை எண் 243 ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை ஏற்க மறுக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் நேற்று முன்தினம் நடந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் ஆகியவற்றை ஆதரித்தும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடைபெறும் போது மட்டும் அதனை எதிர்த்து மறியல் செய்வேன் என இரட்டை வேடம் போடுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பணியிட மாறுதல் ஒன்றே தற்போது தொலைதுாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
இந்த உண்மையை உணர்ந்தும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற மறியல் போராட்டத்திற்கு ஆர்வம் காட்டுகின்றன.
பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை, ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் போன்ற எண்ணற்ற ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு போராடாமல் அரசாணை எதிர்ப்பு என்ற ஒற்றை கோரிக்கைக்காக தன் இன ஆசிரியர்களை திசை திருப்பி மறியல் போராட்டத்திற்கு அழைக்கிறது இந்த கூட்டமைப்புகள்.
அரசாணை எண் 243 ல் பதவி உயர்வு பெற இருக்கும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இன்று பள்ளிக்கு சென்று பணி புரிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.