/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பதினெட்டாம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு பதினெட்டாம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
பதினெட்டாம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
பதினெட்டாம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
பதினெட்டாம் நுாற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு
ADDED : ஜூன் 30, 2024 06:16 AM

பழநி, : பழநியில் 18 ம் நுாற்றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது : பழநியில் அடிவாரம் பகுதியை சேர்ந்த மீனாவிடம் செப்பேடு கிடைத்தது. அதில் சாலிவாகன சகாப்தம் 1691 ம் ஆண்டு பழநி பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர் வழங்கிய பட்டயத்தில் பாலசமுத்திரத்தை சேர்ந்த கட்டய கவுண்டருக்கு, பழநி அடிவாரம் பகுதியில் உள்ள இடத்தை முழு சுதந்திரப் பாத்தியமாக வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டயத்தின் உயரம் 16 செ.மீ., அகலம் 23.5 செ.மீ., எடை 194 கிராம் . இதில் உள்ள எழுத்துக்கள் சிற்றுளி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலசமுத்திரம் பாளையப்பட்டு ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கரும், ஆயக்குடி பாளையப்பட்டு ஜமீன்தார் ஓவளக்கொண்டம நாயக்கரும் இணைந்து வழங்கி உள்ளனர்,என்றார்.