/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தி.மு.க.,எம்.எல்.ஏ., முக நுால் கணக்கில் ஆபாச படங்கள் தி.மு.க.,எம்.எல்.ஏ., முக நுால் கணக்கில் ஆபாச படங்கள்
தி.மு.க.,எம்.எல்.ஏ., முக நுால் கணக்கில் ஆபாச படங்கள்
தி.மு.க.,எம்.எல்.ஏ., முக நுால் கணக்கில் ஆபாச படங்கள்
தி.மு.க.,எம்.எல்.ஏ., முக நுால் கணக்கில் ஆபாச படங்கள்
ADDED : ஜூன் 06, 2024 12:57 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் முகநுால் பக்கத்தை ஹேக் செய்து அதில் சிலர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
பழநி தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில்குமார். அமைச்சர் பெரியசாமியின் மகன். இவரது முகநுால் பக்கத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார். தற்போது அந்த கணக்கு சிலரால்ஹேக் செய்யப்பட்டு ஆபாச படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதை அறிந்த செந்தில்குமார் தன்னுடைய வேறொரு முகநுால் பக்கத்தில் எச்சரிக்கை பதிவிட்டுள்ளார். அதில், என் முகநுால் பக்க கணக்குகளை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்து ஆபாச படங்களை பதிவிட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி மெர்சியும் தனது முகநுால் பக்கத்தில் இதுபோன்ற எச்சரிக்கையை பதிவிட்டுள்ளார்.