Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆசிய தடகள போட்டிக்கு திண்டுக்கல்காரர் தேர்வு

ஆசிய தடகள போட்டிக்கு திண்டுக்கல்காரர் தேர்வு

ஆசிய தடகள போட்டிக்கு திண்டுக்கல்காரர் தேர்வு

ஆசிய தடகள போட்டிக்கு திண்டுக்கல்காரர் தேர்வு

ADDED : மார் 14, 2025 05:59 AM


Google News
திண்டுக்கல்,மார்ச் 14 -திண்டுக்கல் கிழக்கு ஒய்.எம்.ஆர்.பட்டி கோபால்நகரை சேர்ந்த ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணி81. முதியவர்களுக்கான மாஸ்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் தடகள போட்டிகள் மாநில அளவில் 2025 ஜன.,3,4,5ல் மதுரை ஆயதப்படை மைதானத்தில் நடந்தது.

80 வயது பிரிவில் உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதலில் முதல் இடம் பிடித்து தங்கபதக்கம் வென்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்று அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றார். அதன்படி இந்தியா அளவில் தேசிய மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டி பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய நேதாஜி சுபாஷ் மைதானத்தில் 2025 மார்ச் 4 முதல் 10 வரை நடந்தது. தமிழகம் சார்பில் பங்கேற்ற சுப்பிரமணி 80 வயது பிரிவில் உயரம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாவுதல் 2 போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து தங்க பதக்கங்களை பெற்றார். இதை தொடர்ந்து ஆசிய அளவில் இந்தோனேஷியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே ஆசிய அளவில் 2019ல் மலேசியாவில் நடந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று கம்பு ஊன்றி தாவுதல் போட்டியில் 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் , தாய்லாந்தில் 2024 ல் நடந்த இன்டர்நேஷனல் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். தட்டு எறிதல் போட்டியிலும் 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us