/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
மார்பில் கத்தி போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஜூலை 10, 2024 02:17 AM

சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் விழாவில் இளைஞர்கள் மார்பில் 'கத்தி போட்டு' வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் இந்த வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. இந்தாண்டு விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் கல்யாண விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அழைப்புக்காக அம்பாத்துறை அருகே உள்ள போர் கொண்டைக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பாரம்பரிய வழக்கப்படி அம்பாத்துறை ஜமீன் துரைப்பாண்டியன் மாக்காள நாயக்கர் அழைப்பு நடந்தது. அங்குள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் ஜமீன் தானமாக வழங்கிய குதிரைக்கு வழிபாடு , அம்மன் கத்திக்கு பூ அலங்காரம், காதோலை, கருகமணியுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து குதிரை வாகனத்தில் கோயில் நோக்கி கரக ஊர்வலம் நடந்தது. விரதம் இருந்த தேவாங்க செட்டியார் சமூகத்தினர் 'சவுடம்மா தீசுக்கோ' என்ற கோஷத்துடன் மார்பில் கத்தி போட்டபடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.