ADDED : ஜூலை 25, 2024 06:55 AM
திண்டுக்கல்: புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் நாகல் நகர் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.பி.எப்.,மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். தி.மு.க.,அவைத்தலைவர் காமாட்சி,வழக்கறிஞர் சங்க செயலாளர்கென்னடி,சி.ஐ.டியு.,கணேசன்,பிரபாகரன்,ஐ.என்.டி.யு.சி.,கண்ணன்,ஏ.ஐ.டி.யு.சி.,பாலன், எல்.பி.எப்.,சென்றாயன் பங்கேற்றனர்.