ADDED : ஜூலை 26, 2024 12:20 AM
திண்டுக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்த ஊதியக் குழுவை உடனடியாக வெளியிட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைச் செயலர் ராஜாமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துரை அலுவலர் சங்க மாவட்ட துணைச் செயலர் துரைராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பங்கேற்றனர்.