ADDED : ஜூலை 26, 2024 12:20 AM
ஒட்டன்சத்திரம் : தமிழக அரசின் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசு மின்சார சட்டம் 2023ஐ கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் பி.முருகேசன் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அருள் செல்வன் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் எம்.கருணாகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.முருகேசன், ஆர்.எஸ்.பெரியசாமி, என்.நாகேஸ்வரன் பி.மணிகண்டன் கலந்து கொண்டனர்.
பழநியில் நகர செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். நத்தத்தில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி முன்னிலை வகித்தனர்.