/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வில்பட்டி ரோட்டில் விரிசல்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் வில்பட்டி ரோட்டில் விரிசல்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வில்பட்டி ரோட்டில் விரிசல்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வில்பட்டி ரோட்டில் விரிசல்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வில்பட்டி ரோட்டில் விரிசல்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 30, 2024 05:59 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ரோடு சேதமடைந்து வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
சில ஆண்டுக்கு முன் வில்பட்டி கொடைக்கானல் இடையே ரோடு அமைக்கப்பட்டது. அப்போது மழை நீர் வடிந்தோட குழாய் பாலமும் அவசரகதியில் அமைக்கப்பட்டன. பாலம் அமைத்த பகுதி ஒருங்கிணைப்பின்றி பள்ளமாகவும், ரோட்டில் ஆங்காங்கே தார் கலவை பெயர்ந்து விரிசலும் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலை அட்டுவம்பட்டி வரை தொடர்கிறது. பாலம் அமைத்த பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. ரோட்டின் நிலை குறித்து வாகன ஒட்டிகள் புகார் தெரிவித்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாதித்த ரோட்டில் பஞ்சர் பணி பார்த்தும் பலனின்றி ரோடு மேலும் சேதமடைந்துள்ளது.
தெரசா பல்கலை, அரசு கலை கல்லுாரி என முக்கியத்துவம் வாய்ந்த வில்பட்டி ரோட்டின் பரிதாப நிலை வாகன ஓட்டிகளை பாடாய்படுத்துகிறது.
வில்பட்டி விவசாயி தினகரன் கூறுகையில்,'' வில்பட்டி கொடைக்கானல் ரோடு விரிசலுடன் சேதமடைந்துள்ளது. ஏராளமான இடங்களில் தார் கலவை தடம் புரண்டுள்ளதால் இலகு ரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
சமீபத்தில் அமைத்த ரோடு ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் முன் சேதமடைந்துள்ளது தரமற்ற பணியை நினைவு கூறுகிறது. நெடுஞ்சாலைத்துறை துரிதமாக ரோட்டை சீர் செய்ய வேண்டும்''என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' வில்பட்டி ரோடு பணி செய்த இரு ஒப்பந்ததாரருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் விரைவில் சேதமடைந்த ரோடு சீர் செய்யப்படும் ''என்றார்.