/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வடமதுரையில் சிக்கிய மாடு திருட்டு கும்பல் வடமதுரையில் சிக்கிய மாடு திருட்டு கும்பல்
வடமதுரையில் சிக்கிய மாடு திருட்டு கும்பல்
வடமதுரையில் சிக்கிய மாடு திருட்டு கும்பல்
வடமதுரையில் சிக்கிய மாடு திருட்டு கும்பல்
ADDED : ஜூலை 18, 2024 05:03 AM
வடமதுரை : வடமதுரை அருகே சிக்கிய மாடு திருட்டு கும்பலிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தும்மலக்குண்டு கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி அய்யப்பன் வளர்க்கும் இரு பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் இருக்கும் மணல் குவாரி அருகில் கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம் இவரது மனைவி அப்பகுதிக்கு சென்ற ஒரு சந்தேக நபர் ஒருவர் மாடு அருகில் சுற்றி திரிந்தார். இதை கணவர் அய்யப்பனிடம் தெரிவிக்க அவர் மாடு கட்டிருந்த பகுதிக்கு சென்றபோது மாடு இல்லை.
அப்பகுதியில் விசாரித்தபோது சரக்கு வேனில் மாடு கொண்டு செல்லப்பட்ட தகவல் கிடைத்தது. திண்டுக்கல் ரோட்டில் வேல்வார்கோட்டை பிரிவு பகுதியில் மாடுடன் சென்ற சரக்கு வேனை மடக்கி போலீசில் ஒப்படைத்தார். வேனிலிருந்த சதீஸ் தப்பினார்.
வேனுடன் சிக்கிய பெரியகோட்டை பகுதி வியாபாரிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேர்வைகாரன்பட்டி சதீஷிடம் மாட்டை குறைந்த விலைக்கு வாங்கியதாக தெரிவித்தனர். அதன்படி சதீஸை தேடுகின்றனர்.