இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம்
இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம்
இ சேவை மையங்களில் கூடுதல் கட்டணம்
ADDED : ஜூலை 18, 2024 05:02 AM
ஒட்டன்சத்திரம், :' ஒட்டன்சத்திரம், பழநியில் இயங்கும் சில இ -சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஒட்டன்சத்திரம், பழநியில் இயங்கும் சில
இ -சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எந்த சான்றிதழுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை மக்கள் காணும் வகையில் அறிவிப்பு பலகையில் எழுதி அந்தந்த சேவை மையங்களில் வைக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பழநி, திருப்பூர், கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் தொற்று பரவும் இடமாக மாறி உள்ளது. சிறுநீர் கழிப்பிடத்தை அகற்றி பயணிகள் நிற்பதற்கு வசதியாக நிழல் கூரை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.