ADDED : ஜூலை 12, 2024 07:49 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு காங்.,கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை தரை குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார்.
இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் பேசினார். இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் பங்கேற்றனர். அண்ணாமலை உருவ பொம்மையை எரிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர்.
அப்போது காங்.,நிர்வாகிகள் போலீசார் இடையே வாக்குவாதம்,தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு ஒன்றிய தலைவர் அஷ்ரப் அலி, மேற்கு ஒன்றிய தலைவர் கருப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, நகரத் தலைவர் காளிமுத்து, கவுன்சிலர் முகமதுமீரான், மாவட்ட செயலாளர் மாரிமுத்து கண்ணன் கலந்து கொண்டனர்.