ADDED : ஜூலை 28, 2024 07:02 AM
திண்டுக்கல், : பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மாநகர காங்.,சார்பில் திண்டுக்கல் நாகல்நகர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகராட்சி சேர்மன் கார்த்திக், பகுதி செயலாளர்கள் உதயகுமார், அப்பாஸ் மந்திரி, பரமன், நாகலட்சுமி, செந்தில்,நிர்வாகிகள் அதிபன் அபு,பாரதி,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் முகமது அலியார் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பா. ஜ.,அரசை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஒட்டன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர்கள் ரகுமான்சேட், எத்திராஜ், நகராட்சிகவுன்சிலர் முகமது மீரான், நகரத் தலைவர் காளிமுத்து, வட்டாரத் தலைவர்கள் அசரப்அலி, கருப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் சிந்தைகருப்புசாமி, நாச்சிமுத்து, பிச்சைமுத்து, அய்யாவு,ரத்தீஷ் கலந்து கொண்டனர்.
பழநி: பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்காததை கண்டித்து பழநியில் தலைமை தபால் நிலையம் முன்பு காங்., நகர தலைவர் முத்து விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம், செயலாளர் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.