ADDED : ஜூலை 19, 2024 05:34 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம் பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 365 மனுக்கள் பெறப்பட்டது. இதற்கு ஒன்றிய தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் காயத்ரி, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா, ஊராட்சித் தலைவர் மலர்விழி செல்வி முன்னிலை வகித்தனர். பெரிய கோட்டை, சிந்தலவாடம்பட்டி, சத்திரப்பட்டி, வேலூர், வீரலப்பட்டி, புதுக்கோட்டை, ரெட்டியபட்டி ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் வழங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டன.
ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், ஊரக உதவி திட்ட அலுவலர் (மகளிர்) சதீஷ்பாபு, தாசில்தார் சசி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜர், ஒன்றிய செயலாளர் தர்மராஜன் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.