/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்
ADDED : ஜூலை 22, 2024 05:44 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 13 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை,மாலை நேரங்களில் சிறப்பு மண்டகப் பணிகளை தொடர்ந்து அன்னம், சிம்மம், கேடயம், கருட, சேஷ, ஆஞ்சநேயர், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்துருளி தேரோடும் வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜூலை 19 ல் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து பூ பல்லக்கில் திருத்தம்பதியர் கோலத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.முக்கிய நிகழ்வான திருத்தேர் புறப்பாடு மாலை 4:30 மணிக்கு நேற்று நடந்தது. முன்னதாக வள்ளி கும்மி ஆட்டம் நடந்தது. மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் சுப்பிரமணியம், தாடிக்கொம்பு பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி முக்கியஸ்தர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி,உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம்,கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் ,பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி பங்கேற்றனர்.