Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சின்னாளபட்டியில் சந்தனக்குட விழா

சின்னாளபட்டியில் சந்தனக்குட விழா

சின்னாளபட்டியில் சந்தனக்குட விழா

சின்னாளபட்டியில் சந்தனக்குட விழா

ADDED : ஜூலை 22, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர்சாமி கோயில் ஆடி சந்தனக்குட விழாவில் சந்தன கலய ஊர்வலம் நடந்தது.

இதற்காக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று அக்கசாலை விநாயகர் கோயிலிலிருந்து பிருந்தாவன தோப்பிற்கு சந்தனம் நிரப்பிய கலய ஊர்வலம் நடந்தது. கோயிலில் விழா குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு அனைத்து கலயங்களிலிருந்த சந்தனம் தனி பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அவற்றை கரைத்து 18 படி கருப்பணசாமி கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசினர். சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ராம அழகர்சாமிக்கு பதினாறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. திருவிளக்கு பூஜை, ஆன்மீக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us