ADDED : ஜூன் 15, 2024 06:38 AM
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே சின்ன கலையம்புத்துார் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சிதம் 59.
ஜூன் 9 ல் உடல் நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 10 ல் ரஞ்சிதத்தின் கணவர் ராஜேந்திரன் 65, வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். நேற்று மாலை ரஞ்சிதத்தின் மகள் வீட்டில் உள்ள உடைகளை எடுக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கபட்டது தெரிந்தது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.