/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு; 120 பேர் கைது பா.ஜ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு; 120 பேர் கைது
பா.ஜ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு; 120 பேர் கைது
பா.ஜ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு; 120 பேர் கைது
பா.ஜ., போராட்டத்தில் தள்ளுமுள்ளு; 120 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2024 04:26 AM
திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டிப்பது, மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பா.ஜ.,கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் போராட்டம் நடந்தது.
போலீசார் அனுமதி மறுத்த நிலையில் 200க்கு மேலான பா.ஜ.,வினர் நாகல்நகர் பகுதியில் குவிந்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் உருவபொம்மையை பா.ஜ.,வினர் எரிக்க முயன்றனர்.
சுதாரித்த போலீசார் பொம்மையை கைப்பற்றினர். இவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் வினோத்,மாவட்ட பொதுச் செயலர்கள் சொக்கர், கோவிந்தராஜ், பொருளாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், வீரஜோதி, மல்லிகா உட்பட 120 பேரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து சென்று கைது செய்தனர்.
பழநி: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ் தலைமையில் போராட்டம் நடத்த முயன்ற பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து போராட்டத்திற்கு வந்த பா.ஜ.,வினர் ஆங்காங்கே மறியலில் ஈடுபட துவங்கினர்.
திண்டுக்கல் ரோடு சிவகிரி பட்டி, பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி அருகே, பஸ் ஸ்டாண்ட், புது தாராபுரம் ரோட்டில் ரணகாளியம்மன் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனர். 20 பெண்கள் உட்பட
150 க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.