/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கும் தாராளம்: கிராமம் தோறும் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை: கள்ளக்குறிச்சி சம்பவம் பிறகாவது விழிக்குமா போலீஸ் எங்கும் தாராளம்: கிராமம் தோறும் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை: கள்ளக்குறிச்சி சம்பவம் பிறகாவது விழிக்குமா போலீஸ்
எங்கும் தாராளம்: கிராமம் தோறும் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை: கள்ளக்குறிச்சி சம்பவம் பிறகாவது விழிக்குமா போலீஸ்
எங்கும் தாராளம்: கிராமம் தோறும் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை: கள்ளக்குறிச்சி சம்பவம் பிறகாவது விழிக்குமா போலீஸ்
எங்கும் தாராளம்: கிராமம் தோறும் கொடிகட்டி பறக்கும் மது விற்பனை: கள்ளக்குறிச்சி சம்பவம் பிறகாவது விழிக்குமா போலீஸ்
ADDED : ஜூன் 23, 2024 04:27 AM

குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் ,நகர்களில் சில்லறை மதுபான விற்பனை கொடி கட்டி பறக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகாவது இதன் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் ,போலீஸ் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களை நம்பி உள்ள குடும்பங்கள், குழந்தைகள் இன்று நடுத்தெருவுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், மாணவர்கள் , சில பெண்கள் கூட குடிக்கு அடிமையாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மரண ஓலங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சில்லறை மது விற்பனையில் ஈடுபடுபவர் மீது தொடர்ந்து வழக்கு பதிந்து வருகின்றனர்.
இதே போல் மாவட்ட நிர்வாகமும் கிராமங்கள் , நகர்ப்புறங்களில் சாராயம் விற்பனையை தடை செய்வது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகின்றன .
மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் குறைந்தது 5 டாஸ்மாக் , பார்கள் அரசு அனுமதியுடன் உள்ளன. அதே நேரத்தில் குறைந்தது தாலுகாவுக்கு 20 இடங்களில் சில்லறை மது விற்பனையும் நடக்கிறது. இது நன்கு தெரிந்தும் நடவடிக்கையில் மந்தமான போக்கே உள்ளது. மாதத்திற்கு ஒன்று, இரண்டு என அவ்வப்போது வழக்குகள் மட்டும் பதிவு செய்து வருகின்றனர். கிராமங்கள் தோறும் சில்லறை மது விற்பனையால் இன்று பெரும்பாலான
குடும்பங்களில் பெரியவர்கள், சிறியவர்கள் மதுவுக்கு அடிமையாக குடும்பத்தை நடத்த முடியாமல் குடும்பத்தலைவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் போல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டுமாயின், சில்லறை மது விற்பனையை துடைத்தெறிய வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை நடவடிக்கை அவசியமாகிறது . இந்தப் பணிகளில் வருவாய் துறையினரையும் முழுமையாக கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான் இதை கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முடியும்.
.......
கஞ்சா , போதை வஸ்துகளுக்கு மாறுகின்றனர்
கள்ளச்சாராயம் இறப்புகள் அதிகரித்ததால் மட்டுமே மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போலீசார் வருவாய்த் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் விஷம் கலந்த சாராயம் விற்பனை ஆகிறதா என்பதை மட்டுமே ஆய்வு செய்கின்றனர்.
இங்கே மாவட்ட முழுவதும் தாலுகா வாரியாக கிராமங்கள் தோறும் சில்லறை மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விலை கூடுதலாக உள்ளதால் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு மாறி வருகின்றனர். டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம் என்றார்கள். ஆனால் மூடுவதாக தெரியவில்லை. அரசு அலுவலகங்கள் 8 மணி நேரம் திறந்திருந்தால் டாஸ்மாக் மது கடை 10 மணி நேரம் திறக்கிறார்கள். மாவட்டத்தில் எங்கு அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறது என்பது போலீசுக்கு தெரியும். ஆனால் அரசியல் வாதிகளால் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. மக்களின் நலன் , பொருளாதாரம் , உயிர் பாதுகாப்பு கருதி அனுமதியற்ற சில்லறை மது விற்பனைகளை தடை செய்ய வேண்டும்.
இதன் தீமைகள் குறித்து, பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது விளக்க வேண்டும். முடிந்தால் மதுவின் தீமை குறித்து பாட புத்தகங்களில் பாடம் கொண்டு வரலாம்.
ஏ.ராஜரத்தினம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குஜிலியம்பாறை .