ADDED : ஜூலை 08, 2024 12:10 AM
செம்பட்டி: மேட்டுப்பட்டியை சேர்ந்த தர்மசீலன் 65, கனரா வங்கி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று வீட்டிலிருந்து செம்பட்டி நோக்கி, தனது டூ வீலரில் புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை). தனியார் தொண்டு நிறுவனம் அருகே மதுரையிலிருந்து கோவை நோக்கி சென்ற கார் மோதியது. செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.