ADDED : ஜூலை 31, 2024 05:07 AM
திண்டுக்கல், :உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு ஆக., 7 முதல் 9 வரை 3 நாட்கள் விறால் மீன் வளர்ப்பு, பண்ணைக்குட்டைகளில் கூட்டின மீன் வளர்ப்பு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி, பயோபிளாக், பாலிதீன் உறையிட்டு மீன் வளர்த்தல், அலங்கார மீன், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் மீன்வளம் ,மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, டி.எம்.எஸ்.எஸ்.எஸ்., எதிரில், நேருஜி நகர், திண்டுக்கல் அலுவலகத்தை நேரிலோ , 97516 64565 ல் அணுகலாம்.