ADDED : ஜூலை 29, 2024 06:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ஜூலை 31ற்குள் கொடுக்கலாம்.