/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அக்னிச்சட்டி பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அக்னிச்சட்டி
பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அக்னிச்சட்டி
பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அக்னிச்சட்டி
பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் விழாவில் அக்னிச்சட்டி
ADDED : ஜூன் 11, 2024 11:42 PM

நத்தம் : நத்தம் அருகே பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இக்கோயில் விழா ஜூன் 4ல் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு அம்மன் கரகம் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வர அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் பொங்கல் , அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு கரகம் கண்மாய்க்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.