ADDED : ஜூலை 20, 2024 12:57 AM

பழநி : பழநி பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலை கொடைக்கானல் சாலை புளிய மரத்து செட் அருகே ரோட்டில் மரம் விழுந்தது. கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.