ADDED : ஜூன் 10, 2024 05:01 AM
ஊராட்சி ஊழியரை தாக்கியவர் கைது
வடமதுரை: பெரியகோட்டை பாறைப்பட்டியை சேர்ந்தவர் தங்கையா 51. ஊராட்சியில் நீர் தொட்டி இயக்குபவராக வேலை செய்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மதன்குமார் 24, தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கியதில் தங்கையா காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதன்குமாரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.
விபத்தில் இருவர் பலி
வேடசந்துார்: வேடசந்துார் விருதலைப்பட்டியை சேர்ந்த தனியார் ஊழியர் சண்முகம்85. டூவீலரில் விருதலைப்பட்டியிலிருந்து வேடசந்துார் நோக்கி வந்தார். வழியில் விருதலைப் பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி 62, நின்று கொண்டிருந்தார். அவரும் டூவீலரில் ஏறி இருவரும் வந்தனர். டூவீலர் அய்யர்மடம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் இறந்தனர்.
மது விற்றவர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் மதுவிலக்கு டி.எஸ்.பி., ரோந்து பணியில் ஈடுபட்டார். பெருமாள்மலையில் உள்ள பாரில் அனுமதியின்றி மது விற்ற ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பொன்ராஜை36, போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 425 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.