ADDED : ஜூலை 14, 2024 05:13 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு சத்துணவு,அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர்வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் நாராயணசாமி, மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்பாலகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச பென்ஷன் ரூ.6750 அகவிலைப்படியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும். ஈம கிரிகை நிதி ரூ.25000 வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.