Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு

எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு

எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு

எங்கும் --தாராளம் சுரங்கம் போன்ற பாதாள குழிகளால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு

ADDED : ஜூன் 22, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
:செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குளம், கண்மாய், வரத்து கால்வாய் மட்டுமின்றி விவசாய நிலங்களிலும் கட்டுப்பாடற்ற மணல், மண் கொள்ளை நடக்கிறது. பரவிவரும் பாதாள குழிகளாலும் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் குளம், குட்டை, ஊருணி என நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள் உள்ளன. மாவட்ட நிர்வாக பட்டியலின்படி ஒன்றியம் வாரியாக 2539 ,100 ஏக்கருக்கு கூடுதலான பரப்புடன் 107 கண்மாய்கள் பொதுப்பணித்துறை வசமும் உள்ளன. பெரும்பாலான நீராதாரங்களின் நீர்பிடிப்பு வழித்தடம், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு , பராமரிப்பின்றி துார்ந்துள்ளன. பல இடங்களில் ஆவண அடிப்படையில் குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. இப்பணியில் ரூ. பல கோடி ரூபாய்க்கு முறைகேடுகளும் அரங்கேரி உள்ளன. அரசுத்துறை அமைப்புகளின் அலட்சியத்தால் மழை நீரானது சம்பந்தப்பட்ட நீராதாரங்களுக்கு வந்தடைவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

விவசாய பயன்பாடு என்ற பெயரில் கரிசல் மண் துவங்கி வண்டல் மண், சவுடு மண், செம்மண், கிராவல், மணல் போன்றவற்றை மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் இருந்து முறைகேடாக திருடப்பட்டு வருகிறது. இதற்காக நீர் நிலைகளில் பாதாள குழிகளுடன் சுரங்கம் போன்று தோண்டப்பட்டு உள்ளன. விபத்து அபாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டத்திலும் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. வருவாய், போலீஸ், கனிமவளத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மண் திருட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

-

காலாவதி வாகனங்களில் கபளீகரம்

குடகனாறு, மாங்கரை ஆறு, தாமரைக்குளம், சிறுமலையாறு, யானை விழுந்தான் ஓடை, சந்தானவர்த்தினி ஆறு உட்பட மாவட்டத்தில் பரவலாக நீர் நிலைகள், கரைப்பகுதிகள், விவசாய நிலங்களில் மணல், மண் திருட்டு , வணிக உபயோகத்திற்காக கிராவல் மண், கண்மாய் புறம்போக்கு நிலங்களில் செம்மண், வண்டல் மண் திருட்டு வாடிக்கையாகிவிட்டது. ஆளுங்கட்சியினர் விருப்பத்திற்கு ஏற்ப, பரவலாக அனைத்து நீர் நிலைகளிலும் மணல் அள்ளுகின்றனர். கட்டட கட்டுமான பணிகள் மட்டுமின்றி தனியார் செங்கல் சூளைகளுக்கான செம்மண் எடுக்கின்றனர். மண் அள்ளும் இயந்திரத்தை பயன்படுத்தி டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் மண் விற்பனை நடக்கிறது. இதற்காக அரசு முத்திரையை பயன்படுத்தி போலி நடைச்சீட்டுகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு காலாவதி வாகனங்கள், ஒரே பதிவெண் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் ,ஒரே வாகனத்தில் முன், பின் புறங்களில் வெவ்வேறு பதிவெண் தட்டுகள் உள்ள லாரிகளை இதற்காக பயன்படுத்துகின்றனர்.-- சுந்தரமகாலிங்கம் ,சமூக ஆர்வலர், செம்பட்டி.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us