Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

ADDED : ஜூலை 25, 2024 06:50 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோயிலில் காலை 7 :00மணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர், சவுராஷ்டிராபுரம் விநாயகர், வாணிவிலாஸ் மேடு கலைக்கோட்டு விநாயகர், ரவுண்ட்ரோடு கற்பக விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

செம்பட்டி : செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.,

ரெட்டியார்சத்திரம் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

-பழநி : பழநி பட்டத்து விநாயகர் கோயில், மலைக்கோயில் ஆனந்த விநாயகர் கோயில், கலையம்புத்துார் கைலாசநாதர் கல்யாணியம்மன் கோயில், சண்முகபுரம் சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us