/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாற்றுத்திறனாளிகள் தர்ணா;அதிகாரிகளை போஸ்ட் மேன் என கூறி வாக்குவாதம் மாற்றுத்திறனாளிகள் தர்ணா;அதிகாரிகளை போஸ்ட் மேன் என கூறி வாக்குவாதம்
மாற்றுத்திறனாளிகள் தர்ணா;அதிகாரிகளை போஸ்ட் மேன் என கூறி வாக்குவாதம்
மாற்றுத்திறனாளிகள் தர்ணா;அதிகாரிகளை போஸ்ட் மேன் என கூறி வாக்குவாதம்
மாற்றுத்திறனாளிகள் தர்ணா;அதிகாரிகளை போஸ்ட் மேன் என கூறி வாக்குவாதம்
ADDED : ஜூலை 17, 2024 12:25 AM

திண்டுக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் தர்ணாவாக மாறிய நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளை ''போஸ்ட் மேன் தானே நீங்கள் கலெக்டரை வரச்சொல்லுங்க '' என கூறியப்படி சங்க செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஓராண்டுக்கு முன் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடின்றி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். 500க்கு மேற்பட்டோர் குவிய ஆர்ப்பாட்டம் தர்ணாவாக மாற கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாயிலிருந்து முன்னெறி வந்தனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே இவர்களிடம் ஆர்.டி.ஓ., சக்திவேல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ,நீங்கள் போஸ்ட் மேன் தானே. தகவல் பரிமாறுபவர்களிடம் எங்களால் பேச முடியாது . கலெக்டரிடம் மட்டுமே பேசுவோம் என கூறியப்படி மாவட்ட செயலாளர் பகத்சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பின் கலெக்டரை சங்கத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பார்க்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கோரிக்கையை மனுவாக அளித்தப்படி கலைந்து சென்றனர்.