ADDED : ஜூலை 27, 2024 06:31 AM
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் பேரூராட்சி தலைவர் ரேகா அய்யப்பன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கல்பனா வரவேற்றார். கோனார் தெருவில் ஆழ்குழாய் கிணற்றில் மினி பவர் பம்ப் ,பைப் லைன் அமைத்தல், இதே தெருவில் வடிகாலினை சீரமைத்து, சாமன்னா நகர், கள்ளர் தெருக்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.