ADDED : ஜூலை 12, 2024 07:45 AM

திண்டுக்கல்: ஊரக வளர்ச்சி துறையில் ஊராட்சி அளவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஈஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் குருசாமி வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி,மாநிலத் தலைவர் ராமநிதி, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற் சங்க மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து பேசினர்.