ADDED : ஜூன் 01, 2025 01:39 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த ஏழுகுண்டூரை சேர்ந்த தச்சு தொழிலாளி மூர்த்தி, 44. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பெரியனுாரில் நடந்த, உறவினர்
திருமணத்திற்கு பைக்கில் சென்று திரும்பிய போது, கோவில்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதில், இடுப்பு, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.