/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'மா'விற்கு விலை நிர்ணயம் செய்யாமல் முடிந்த முத்தரப்பு கூட்டத்தால் விவசாயிகள் அதிருப்தி 'மா'விற்கு விலை நிர்ணயம் செய்யாமல் முடிந்த முத்தரப்பு கூட்டத்தால் விவசாயிகள் அதிருப்தி
'மா'விற்கு விலை நிர்ணயம் செய்யாமல் முடிந்த முத்தரப்பு கூட்டத்தால் விவசாயிகள் அதிருப்தி
'மா'விற்கு விலை நிர்ணயம் செய்யாமல் முடிந்த முத்தரப்பு கூட்டத்தால் விவசாயிகள் அதிருப்தி
'மா'விற்கு விலை நிர்ணயம் செய்யாமல் முடிந்த முத்தரப்பு கூட்டத்தால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 01, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், மாங்காய்க்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான முத்தரப்பு கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்த அறிக்கையை, முதல்வருக்கு அனுப்புவதாக அலுவலர்கள் கூறி, கூட்டத்தை முடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, 2ம் கட்டமாக மா விலை நிர்ணயிப்பது தொடர்பான முத்தரப்பு கூட்டம் டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் தலைமையில் நடந்தது. இதில், மா விவசாயிகள், வேளாண் துறை அலுவலர்கள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ராமகவுண்டர், தமிழக விவசாயி
கள் சங்க தலைவர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 72 மாங்கூழ் தொழிற்சாலைகள் இயங்கிய நிலையில், தற்போது சக்தி படைத்த, 5 பேர் மட்டும் தொழிற்சாலை நடத்துகின்றனர்.
இதனால், விவசாயிகளின் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தொழிற்சாலைகள் அதிகரித்தால், போட்டி போட்டு வாங்குவதால் மாங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாங்காய்க்கு மற்ற மாநிலங்களில் நிர்ணயிப்பது போல் விலையும், இழப்பீட்டுக்கு மானியமும் கேட்கிறோம். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டை மாநில மாங்காய்களை வாங்குவதை, மாங்கூழ் தொழிற்சாலைகள் கைவிட வேண்டும்.
சிவகுரு, விவசாயி: மாங்காய்க்கு இன்சூரன்ஸ் இல்லை. நிறைய செலவு செய்து பராமரிக்கிறோம். இழப்பு ஏற்பட்டால் கிடைக்கும் வகையில் இன்சூரன்ஸ் இல்லை.
வேளாண் துறை துணை
இயக்குனர் பச்சையப்பன்: வாழை, தென்னைக்கு உள்ள காப்பீடு போல் மா வகைக்கு இல்லை. இது குறித்து அரசுக்கு தெரிவிக்கிறோம்.
சவுந்திரராஜன், விவசாயி: கடந்தாண்டு மா விளைச்சல் பாதிப்பை கணக்கிட்டு, 82 சதவீத பாதிப்பு இருப்பதாக கூறினீர்கள். இழப்பீடு தொகை வரவில்லை. மானியம், பி.வி.சி., பைப்லைன் என எங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. நான்காண்டாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போட்ட தமிழக அரசு, மா விவசாயத்தை பற்றி ஒரு வரி கூட கூறவில்லை. கடந்த முத்தரப்பு கூட்டத்தில், மாங்காய் கிலோவுக்கு, 12 ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு, தற்போது, 5 ரூபாய் கொடுக்குறீர்கள். மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் நேரடியாக கேட்கிறேன். சொன்ன தொகையையாவது கொடுங்கள்.
வேளாண் துறை துணை
இயக்குனர் பச்சையப்பன்: தற்போது மா உற்பத்தி அதிகரித்துள்ளது. மாங்கூழ் ஆர்டர்களை பொறுத்தே, அவர்களும் விலை நிர்ணயிக்க முடியும். மாவட்டத்தில், 'கிரிஸ்மா' என்ற திட்டம் மூலம், தொழிற்சாலைகள் உட்பட அனைவருக்கும், மா விலை
நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அது குறித்து மீண்டும் கலந்தாலோசிப்போம்.
மாங்கூழ் தொழிற்சாலை
உரிமையாளர்கள்: நீங்கள் கேட்கும் விலையை நாங்கள் கொடுக்க முடியாது. எங்களிடம் மாங்கூழ் வாங்குபவர்கள் விலையை குறைத்து கேட்கும்போது, உங்களுக்கு எப்படி அதிக விலை கொடுத்து, மாங்காய் வாங்க முடியும். பல வெளிநாடுகள், போர் மற்றும் உள்நாட்டு பிரச்னையால் மாங்கூழுக்கு கொடுத்த ஆர்டர் படி வாங்கவில்லை. உங்களுக்கு இழப்பு ஏற்படுவது போல் எங்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்தும் அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். எங்களால் விலை
நிர்ணயிக்க முடியாது.
வேளாண் துறை துணை
இயக்குனர் பச்சையப்பன்: அப்படியெனில் விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் உங்களது அறிக்கைகளை கொடுங்கள். அதை வைத்து நாங்களும் விரிவான அறிக்கை தயாரித்து, அரசு செயலாளர், வேளாண் உற்பத்தி கமிஷனர், மற்றும் தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்புகிறோம். சென்னைக்கு நேரில் சென்று விவரிக்கிறோம்.
இவ்வாறு அந்த கூட்டத்தை அலுவலர்கள் முடித்து விட்டனர். கடைசிவரை மாங்காய்க்கு விலை நிர்ணயிக்காததால், முத்தரப்பு கூட்டம் என்ற பெயரில் கண் துடைப்பு கூட்டம் நடத்தியதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியபடி சென்றனர்.